தயிர் வடை tamil samayal

Loading...
Description:

tamilooஎன்னென்ன தேவை?

உளுந்தம் பருப்பு- 1 கப்
புளிப்பில்லாத தயிர்- அரை லிட்டர்
சீரகம், கடுகு- அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1சிட்டிகை
கேரட் துருவல்-2 டீஸ்பூன்
இஞ்சி-1சிறிய துண்டு
பச்சை மிளகாய்-2
நறுக்கிய கொத்தமல்லிதழை- ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை-சிறிதளவு
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
எப்படி செய்வது?

உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை சிறிய வடைகளாக தட்டி போட்டு வேகவைத்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் 1 டீஸ்பூன்  எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து ஆற வைத்து உப்பு சேர்த்து தயிருடன்  கலக்கவும். இந்த தயிர் கலவையில் நறுக்கிய கொத்துமல்லிதழை ஆய்ந்த கறிவேப்பிலை, ஆறிய வடைகளை மூழ்கும் படி போட்டு 30 நிமிடங்கள்  ஊறவைக்கவும். பின்னர் எடுத்து தட்டில் வரிசையாக வைத்து ஒவ்வொரு வடையின் நடுவிலும் சிறிதளவு கேரட் துருவல் வைத்து அலங்கரித்து  பரிமாறவும்

Post a Comment