தயிர் சாதம் (தமிழ்நாடு) tamil samayal

Loading...
Description:

tamil win samayal

  • சாதம் – 1 கப்
  • தயிர் – 1 கப்
  • பால் – 1/4 கப்
  • வெண்ணெய் – 1 ஸ்பூன்
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • கடலைபருப்பு – 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி – 1/2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 1
  • மோர் மிளகாய் – 4
  • கறிவேப்பிலை – 1 ஆர்க்
  • பொடியாக நறுக்கிய மாங்காய் – 4 ஸ்பூன்
  • நறுக்கிய கொத்துமல்லி – 2 டீஸ்பூன்
  • எண்ணெய்
  • உப்பு

 

  • வாணலியில் எண்ணெய்விட்டு மோர் மிளகாயை பொரித்து தனியே எடுத்து வைக்கவும்..
  • பின்னர் கடுகு, கடலைபருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்த்து க்ரீம் போன்று சாப்டாக வரும் வரை நன்கு கலக்கவும்.
  • அதில் பொடியாக நறுக்கிய மாங்காய், நறுக்கிய கொத்துமல்லி, சாதம், 2 உதிர்த்த மோர்மிளகாய் சேர்த்து கலக்கவும்.
  • கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Post a Comment