தயிர்வடை ஸ்பெஷல்

Loading...
Description:

தயிர்வடை ஸ்பெஷல்

  • சிறுபருப்பு – 1 கப்
  • தயிர்/ யோகர்ட் – 1/2 லிட்டர்
  • காய்ந்த மிளகாய் – 10
  • சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை – 1 பெரிய துண்டு
  • கொத்தமல்லித்தழை – சிறிது (பொடியாக நறுக்கிவும்)
  • எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
  • உப்பு – தேவைக்கேற்ப

  • முதலில் சிறு பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும், பின்னர் அதை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக வடை பக்குவத்திற்கு அரைத்து வைக்கவும்.
  • சர்க்கரையை பொடித்து தண்ணீர் விட்டு பாகு காய்ச்சிக்கொள்ளவும் கம்பிப்பாகுக்கு முந்தின பக்குவம்
  • வெறும் வாணலியில் காய்ந்தமிளகாய் மற்றும் சீரகத்தை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும்.
  • வடை மாவுடன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித்தழையும், உப்பும் சேர்த்து பிசைந்து விட்டு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும், மாவை சிறிது எடுத்து அதை ஏதாவது ஷேப்புக்கு வடையாக தட்டி போட்டு பொரித்து எடுத்து தனியே எடுத்து ஆறவைக்கவும்.
  • ஒரு பெரிய அகன்றப்பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் வடைகளை அதில் போட்டு ஊறவைக்கவும். அந்த பாத்திரத்தை ஃப்ரிஜ்ஜில் எடுத்து வைத்துவிடவும்.
  • பரிமாறும் முன்பு ஒரு சின்ன கிண்ணத்தில் தயிருடன் வடையை எடுத்து வைத்து அதன் மேல் சர்க்கரைப்பாகினை ஊற்றி அதன் மேல் வறுத்து வைத்துள்ளப்பொடியினை போட்டு பரிமாறவும். சாப்பிட வித்தியசாமான டேஸ்ட்டாக இருக்கும்.

Post a Comment