தக்காளி குழம்பு,samayal in tamil

Loading...
Description:

7b4251c7-8074-4a3a-a4f7-336f3aeaf0e7_S_secvpf.gif

தேவையான பொருட்கள் :

தக்காளி – 2

பெரிய வெங்காயம் – 1

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி

தாளிக்க :

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – தேவையான அளவு

கறிவேப்பிலை, உப்பு- கொஞ்சம்

செய்முறை

:

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைவாக வந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து மிளகாய் தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* மிளகாய் வாசம் போனதும் அடுப்பை நிறுத்தவும்,,(தேங்காய் சோம்பு சேர்த்து அரைத்தும் சேர்க்கலாம்)

* மிகவும் ஈசியாக செய்யகூடிய தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட தக்காளி குழம்பு

Post a Comment