டீன்-ஏஜ் வயதினரின் மன அழுத்தத்தை போக்கும் தியானம்

Loading...
Description:

8c90330c-44f8-425c-8773-aa1df6eaa46b_S_secvpf.gifதியானம் என்றால் அமைதி என்று பொருள். தியானம் அமைதியை மீட்டுத் தரும் அருமருந்தாக உள்ளது. தினமும் 30 நிமிடங்கள் தியான நிலையில் மனதை வைத்திருந்தால் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதவை. இத்தகைய தியானத்தை முறையாகப் பயிலவும், பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை ஒரு அமைதியான பயணமாகவே இருக்கும்.

அந்த தியானம் செய்வதன் காரணமாக நமக்கு கிடைக்கும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பலன்களைப் பற்றி பார்க்கலாம். தியானத்தால் மனதை நிறைவாக வைத்திருப்பது குறைவான மன அழுத்த உணர்வைத் தருவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் குறைவாக சுரப்பதுடனும் தொடர்பு கொண்டுள்ளது.

தியானத்தால் நெறிமுறைகளுடன் இருக்கும் போது, நம்மால் ஒரு விஷயத்தை நேரடியாகப் பார்ப்பதை விடவும், ஆழமாகப் பார்த்து அலச முடியும். சாதாரணமாக இருக்கும் ‘பிளைன்ட் ஸ்பாட்ஸ்’ எனப்படும் மனதின் இருண்ட பகுதிகளை வெற்றி கொள்ள நெறிமுறைகள் உதவும் என்று ஜர்னல் ஆஃப் சைக்காலஜிக்கல் சயின்ஸின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் நிதர்சனத்தைத் தாண்டி, நாம் செய்யும் தவறுகளை அவை வெளிப்படுத்தவும் அல்லது குறைக்கவும் செய்கின்றன. தியான நெறிமுறைகளுக்கான பயிற்சியின் மூலம் நாள்பட்ட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களின் வலி குறையாவிட்டாலும், அவர்களுக்கு வரும் மன அழுத்தம் மற்றும் களைப்பை குறைக்க முடிகிறது என்று சொல்கிறது.

தியான வழிமுறையில், உடல்-மனம் ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த பயிற்சியளிப்பதன் மூலம் மன ரீதியான நோய்கள் வராமல் மூளையைப் பாதுகாக்க முடியும். தியானப் பயிற்சிகள் செய்வதன் மூலம் மூளைக்கு அக்ஸோனல் டென்சிட்டி (axonal density) என்ற சிக்னல் தொடர்புகள் செல்வது அதிகரிக்கிறது.

அதேப்போல சின்குலேட் மூளைப் பகுதியின் முன்னால் உள்ள ஆக்ஸன்களைச் சுற்றிலும் மையிலின் என்ற பாதுகாக்கும் தசையின் அளவும் அதிகரிக்கிறது. மனம் நிறைந்த தியானமானது, உடலின் விழிப்புணர்வு, சுய-விழிப்புணர்வு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கவனத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற நான்கு மூலக்கூறுகளை தூண்டி நமக்கு உதவுகிறது.

மனம் நிறைந்த தியானத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று பள்ளியின் திட்டங்கள் வழியாக டீன்-ஏஜ் சிறுவர்-சிறுமியருக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம், அவர்களுடைய மன அழுத்தம், பயம் மற்றும் அச்சத்தைத் தவிர்க்க முடியும்.

Post a Comment