ஜில் ஜில் ரமாமணி பாயாசம்

Loading...
Description:

13524468_1039648619415527_1350037344442004210_n


தேவையான பொருட்கள்:
இளநீர்வழுக்கை (பொடியாக அரிந்தது) – ஒன்று + அரை கப்
நுங்கு(பொடியாக அரிந்தது) – அரை கப்
தேங்காய் பால்(தடிப்பானது) – ஒரு கப்
பால் டின்(கன்டென்ஸ்ட்மில்க்) – அரை டின்
இளநீர் – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி
பால் – கால் கப்
முந்திரியகொட்டை (கஜூ) – 50 கிராம்
பிளம்ஸ் – 50 கிராம்
பனை கற்கண்டு -50 கிராம் (இளநீர் சுவைக்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும் )

செய்முறை :

1.ஒரு பாத்திரத்தில் பால், இளநீர் வழுக்கை (பொடியாக அரிந்தது), நுங்கு, (பொடியாக அரிந்தது), தேங்காய்பால் (தடிப்பானது), பால் டின்(கன்டென்ஸ்ட் மில்க்), இளநீர், ஏலக்காய்த்தூள், பனங்கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

2.கலக்கியவற்றை சிறிய கிண்ணங்களில் ஊற்றி அதன் மேல் முந்திரிக்கொட்டை(கஜூ), பிளம்ஸ் ஆகியவற்றை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

3 . குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது நேரம் கழித்து பறிமாறவும்.

Tips:
1.சத்தானதும்,சுவையானதும்,வெயில் காலங்களுக்கு ஏற்றதுமான பாயாசம் ஜில் ஜில் பாயாசம் ஆகும். இதன் சுவையோ தனிச்சுவை ஆகவே இதை செய்து சுவைத்து மகிழவும்.

Post a Comment