ஜிம், யோகா, டயட் என்று கட்டுக்கோப்பாக இருந்த ஸ்ரீதேவிக்கா மாரடைப்பு?

Loading...
Description:

அவரின் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உடல்நலத்தை பேண அதிக முக்கியத்துவம் கொடுத்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலான ஸ்ரீதேவி பெண் சூப்பர் ஸ்டார் ஆனார். உடல் நலத்தை பேணுவதற்கு எப்பொழுதுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

அவரின் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

யோகா

ஸ்ரீதேவி தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். மேலும் யோகாவும் செய்தார். ஃப்ரை செய்த உணவு வகைகளை தொட்டுக் கூட பார்க்க மாட்டார். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

டென்னிஸ்

வாரத்திற்கு ஒரு முறை நீச்சல் அடிப்பார். மேலும் வாரத்திற்கு இரண்டு முறை டென்னிஸ் ஆடி வந்தார். இது தவிர உணவுக் கட்டுப்பாட்டிலும் இருந்து வந்தார்.

உடல் நலம்

பெண்கள் அனைவரும் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நமக்காகவும், குடும்பத்தாருக்காகவும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.

மரணம்

உடல்நலத்தின் மீது அக்கறை கொண்ட ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதை பலராலும் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியை பற்றி தெரிந்த பாலிவுட் பிரபலங்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியையும், கவலையையும் அளித்துள்ளது

Post a Comment