சோள ரவை உப்புமா

Loading...
Description:

b1a88e5e-149c-49e9-af1a-2b10272b2778_S_secvpf.gif

தேவையான பொருட்கள்:

சோள ரவை- கால் கிலோ
கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம்,உருளைகிழங்கு, பீன்ஸ் என உங்களுக்கு பிடித்த கறிகாய்கள்- எல்லாமாக நறுக்கினது ஒரு பெரிய கப்

தாளிக்க

கடுகு,
கறிவேப்பிலை,
உளுத்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பு
பச்சை மிளகாய் – 2
எலுமிச்சம்பழம் – அரை மூடி
கொத்தமல்லி – கொஞ்சம் (நறுக்கியது)
நெய் – 2ஸ்பூன் செய்முறை:

செய்முறை :

• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து, அதனுடன் வெங்காயம், கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும்.

• ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு பத்திரத்தில் கொதிக்க விடவும்.

• காய்கறிகள் வதங்கினதும் ரவையை போட்டு நன்கு வறுக்கவும்.

• ரவை நன்கு வறுபட்டதும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணிரை விடவும். உப்பு போடவும்.

• நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும்.

• தேவையானால் இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

• இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!

Post a Comment