சோறுடன் சாப்பிட உகந்த முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு

Loading...
Description:

தேவையான பொருட்கள்:
* முட்டை- 4
* எண்ணெய்- தேவையான அளவு
* வெங்காயம்- 2
* தக்காளி-1
* பச்சை மிளகாய் – 2
* புளி -எலுமிச்சை காய் அளவு
* மஞ்சத்தூள்-அரை ஸ்பூன்
* மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்
* கொத்தமல்லித்தூள் -அரை ஸ்பூன்
* சோம்பு-அரை ஸ்பூன்
* தேங்காய்-சிறிதளவு
* உப்பு-தேவையான அளவு

அரைக்க வேண்டிய பொருட்கள்:
* காய்ந்த மிளகாய்-2
* மிளகு-அரை ஸ்பூன்
* சீரகம்-1 ஸ்பூன்

தாளிக்க வேண்டியவை பொருட்கள்:
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு – 1/4டீஸ்பூன்
* வெந்தயம்-1/4டீஸ்பூன்
* கறிவேப்பிலை-1 கொத்து

செய்முறை:
* முதலில் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக அறிந்து வைத்துக் கொள்ளவும்.

* பின்பு அரைக்க கொடுத்துள்ள மிளகாய் ,சீரகம்,மிளகு இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்பு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

* பின்பு சோம்பையும்,தேங்காவையும் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

* பின்பு முட்டை,உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள (மிளகாய்,சீரகம்,மிளகு) பொடியைப் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

* பின்பு தோசைக் கல்லில் எண்ணையை ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும், அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்துகொள்ளவும்.

* பின்பு முட்டை ஆம்லேட்ஐ நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

* வதக்கிய பின்பு புளிச் சாறுடன்,மஞ்சத்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து அதில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

* பின்பு நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது [தேங்காய் + சீரகம்] சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

* இறக்கும்பொழுது சிறிது மணித்துளிகள் முன்பு வெட்டி வைத்த ஆம்லெட் துண்டுகளைப் போட்டு இறக்கவும்.

* சுவையான முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு ரெடி

Post a Comment