சைனீஸ் மட்டன் சாப்ஸ் tamil samayal

Loading...
Description:

chinese-mutton-chops2232சைனீஸ் மட்டன் சாப்ஸ் தேவையான பொருட்கள்

பொரிக்க
ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள்        – 6
வெங்காயம்                                              – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட்                          – 1 டீஸ்பூன்
எண்ணெய்                                                – பொரிக்க

 

கிரேவி செய்ய

 

வெங்காயம்                            – 1
குடமிளகாய்                           – 1
அஜினமோட்டோ                – 1 சிட்டிகை
சோயா சாஸ்                         – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு      – தேவையான அளவு
சீனி                                            – 1 டீஸ்பூன்

 

சைனீஸ் மட்டன் சாப்ஸ் செய்முறை

 

ஒரு வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். கிரேவியில் கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் அரைத்தது, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து சாப்ஸ் கறியில் பிசறி அரைமணி நேரம் ஊறவிடவும். பின்னர் அக்கறியை அந்த மசாலாவுடன் குக்கரில் போட்டு வேக வைக்கவும். பின்னர் அந்த கறியை எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் குடமிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் கிரேவிக்கு கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்க்கவும். பின்னர் பொரித்து வைத்துள்ள சாப்ஸையும் சேர்த்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.

Post a Comment