செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்

Loading...
Description:

201607190908091484_how-to-make-Szechuan-Chicken-Noodle_SECVPF.gif

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ்  – 1 கப்
பூண்டு – 5
எலும்பில்லாத சிக்கன் – 150 கிராம்
வெங்காயம் – 2
கேரட் – 1
குடைமிளகாய் – 2
அஜினோ மோட்டோ – சிறிது
முட்டை – 2
மிளகு தூள் – 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
வரமிளகாய் விழுது அல்லது சில்லி சாஸ்  – 2 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
சர்க்கரை – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், வெங்காயத்தாள், கேரட், குடைமிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும்.

* நூடுல்ஸை வேக வைத்து வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு சிறிது எண்ணெய் போட்டு பிரட்டி வைக்கவும். இவ்வாறு செய்தால் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

* ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பொடி செய்த பூண்டை போட்டு வதக்கவும்.

* அடுத்து சிக்கனை சேர்த்து மிதமான தனலில் வைத்து, சிக்கன் வேகும் வரை வதக்கவும்.

* பின்னர் வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து, சிறிது அஜினோ மோட்டோ தூவி வதக்கவும்.

* அனைத்தும் வதங்கியதும், காயை ஒதுக்கி நடுவில் குழி செய்து, 1 ஸ்பூன் ஆயில் விட்டு அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்த 2 முட்டையை ஊற்றி பொரிக்கவும்.

* முட்டை வறுபட்டதும் வரமிளகாய் விழுது, தக்காளி சாஸ், சோயா சாஸ், சிறிது சர்க்கரை, சேர்த்து பிரட்டி நூடுல்ஸ், வெங்காயத்தாள் சேர்த்து மசாலா நுடுல்ஸில் நன்றாக பரவும் படி பிரட்டி சூடாக பறிமாறவும்.

* செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ் ரெடி.

Post a Comment