சென்னை சிக்கன் பிரியாணி,tamil samayal briyani

Loading...
Description:

சென்னை சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 2 கப்
எலும்புள்ள சிக்கன் – ½ கிலோ
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 5
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
நெய் – 2 மேஜைக்கரண்டி
கிராம்பு – 3-4
பட்டை – 1” துண்டு
பே லீஃப் – 2
நட்சத்திர சோம்பு – 1
ஏலக்காய் – 2 – 3
வெங்காயம் – 2
புதினா, மல்லித் தளை – 1 கப் (நறுக்கியது)
தக்காளி – 2
தயிர் – ½ கப்
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – தேவையான அளவு

 

ஊற வைக்க
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய் தூள் – ½தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

பாஸ்மதி அரிசியை 5 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவி எடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எலுமிச்சை சாறு மஞ்சள் தூள் மிளகாய் தூள்உப்பு சேர்த்து ஊற வைக்கவும்

இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கிராம்பு, பட்டை, பே லீஃப், நட்சத்திர சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்

பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின்பு அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

பின்பு நறுக்கிய புதினா மற்றும் மல்லித் தளை சிறிது நிமிடம் வதக்கவும்

பின்பு சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்

பின்பு தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் வெளியேறும் வரை வைக்கவும்

4 கப் நீர் சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு சுவையை சரி பார்த்துக்கொள்ளவும். பின்பு பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி பின்பு அதனை மூடி வைத்து மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும் பின்பு 5 – 7 நிமிடம் சிம்மில் வைக்கவும்

பின்பு புதினா மற்றும் மல்லித் தளை தூவி இறக்கவும்

இப்போது சிக்கன் பிரியாணி ரெடி

Post a Comment