செட்டிநாடு மட்டன் பிரியாணி (chettinad Mutton Biryani)

Loading...
Description:

mutton biryaniதேவையான பொருட்கள்:

 • மட்டன் -1/2kg
 • மிளகாய் தூள்- 1tbsp
 • மஞ்சள் தூள்- 1tbsp
 • இஞ்சி பூண்டு பேஸ்ட்
 • கருவேப்பிலை
 • பாஸ்மதி அரிசி-3
 • கப் கெட்டி தயிர்-1கப்
 • வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-2
 • தக்காளி(பொடியாக நறுக்கியது)-3
 • பெருஞ்சீரகம் -1tsp
 • பிரியாணி இலைகள்
 • கிராம்பு
 • பட்டை
 • ஏலக்காய்
 • புதினா
 • கொத்தமல்லி இலைகள்

அரைக்க தேவையான பொருட்கள்:

 • காய்ந்த மிளகாய்-3
 • பச்சை மிளகாய்-4
 • வெங்காயம்-1/4 கப்
 • பெருஞ்சீரகம் -1tsp
 • கிராம்பு-4
 • ஏலக்காய்-6
 • பட்டை -2
 • இஞ்சி துண்டுகள்
 • பூண்டு-15
 • புதினா இலைகள்-1/2 கப்

செய்முறை: 

 1. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி ,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.அதனுடன் மட்டன் துண்டகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 2. வதக்கியதும் அதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
 3. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து கடாயில் நெய் ஊற்றி அதில் அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
 4. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.இப்பொழுது வேக வைத்த மட்டன் தனியாகவும்.வேக வைத்த மட்டன் தண்ணீர் தனியாகவும் எடுத்து வைத்து கொள்ளவும்.
 5. ஒரு பெரிய பிரஷர் குக்கரில் நெய்/எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
 6. அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .வதக்கியதும் வேக வைத்த மட்டன் ,புதினா,
 7. கொத்தமல்லிதழை சேர்த்து நன்றாக குறைந்த தீயில் வதக்கவும்.
 8. வதக்கியதும் அதனுடன் வேக வைத்த மட்டன் தண்ணீர் மற்றும் கெட்டி தயிர் சேர்த்து 4+1/2 கப் ஊற்றி அரிசி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மூடி போட்டு ஆவி வெளியே வந்தவுடன் வெயிட் போட்டு குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.(விசில் வர வெயிட் பண்ண தேவையில்லை )
 9. குக்கர் மூடியை திறந்து லேசாக கிளறி விட்டு கொத்தமல்லிதழை தூவி தயிர் பச்சடியுடன் அல்லது ரைத்தவுடன் பரிமாறலாம் .

சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி ரெடி

Post a Comment