செட்டிநாடு நண்டு வறுவல்

Loading...
Description:

சுவையான செட்டிநாடு நண்டு வறுவல், எளிய செட்டிநாடு நண்டு வறுவல், செட்டிநாடு நண்டு வறுவல் செய்யும் முறை, பிரபலமான செட்டிநாடு நண்டு வறுவல், செட்டிநாடு நண்டு வறுவல் செய்முறை, செட்டிநாடு நண்டு வறுவல் சமையல் குறிப்புகள், செட்டிநாடு நண்டு வறுவல் செய்வது எப்படி.
உங்கள் சுவையை தூண்டும் செட்டிநாடு நண்டு வறுவல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான செட்டிநாடு நண்டு வறுவல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை
நண்டு – 5
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சிகப்பு மிளகாய் – 10
தனியா – 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 அங்குலத் துண்டு
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
உணவு செய்முறை : செட்டிநாடு நண்டு வறுவல்
Step 1.
முதலில் நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.

Step 2.
பின் இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், தனியா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

Step 3.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.

Step 4.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும் பிறகு நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின் இறக்கவும்.

Post a Comment