செட்டிநாடு சிக்கன் சூப்

Loading...
Description:

food66

தேவையான பொருட்கள்

சிக்கன் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
பட்டை, லவங்கம் – சிறிதளவு
மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 4 விசில் வரும் வரை வேக விடவும். மிகவும் சுவையான செட்டிநாடு சிக்கன் சூப் ரெடி.

Post a Comment