சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா

Loading...
Description:

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 10
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] தனியா தூள் – 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தேங்காயை அரைத்து திக்காக பால் எடுக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், [பாட்டி மசாலா] தனியா தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கவும். இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய்ப்பாலை ஊற்றி குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா ரெடி.

Post a Comment