சீரக குழம்பு

Loading...
Description:

d3638502-a4b5-47d0-b932-58def4ef4c24_S_secvpf.gif

தேவையான பொருட்கள் :

சீரகம் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – ஸ்பூன் குழம்பு
மிளகாய் தூள் – ஸ்பூன்
வெந்தயம் – 2 ஸ்பூன்
கெட்டியான புளிக்கரைசல் – 50 கிராம்
மஞ்சள் தூள், வெல்லம், கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகத்தை போட்டு பொரிக்கவும்.

* காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து புளிக்கரைசலை ஊற்றவும்.

* உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.

* மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

* குழம்பு வடகத்தை தாளித்தும் சேர்க்கலாம். ஆறிய சாதத்தில் இந்த குழம்பை விட்டு நெய் சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Post a Comment