சில்லி பரோட்டா

Loading...
Description:

6-IMG_2234

சில்லி பரோட்டாவில் கலர் குடைமிளகாய், வெங்காயத்தாள், கொத்துமல்லித் தழை இவையும் சேர்ந்தால் இன்னும் அருமையாக இருக்கும். இந்தப் பொருட்கள் கைவசம் இல்லாததால் இந்த முறை ‘சிம்பிள்’ சில்லி பரோட்டாவாக செய்ய வேண்டியதாகி விட்டது. ஆனால் இதுவும் சுவை சூப்பர்தான்! 🙂  
தேவையான பொருட்கள்
ரெடிமேட் பரோட்டா-4
வெங்காயம் -பாதி
தக்காளி(சிறியதாக)-1
பச்சைமிளகாய்-1
இஞ்சி-பூண்டு விழுது – 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை – கொஞ்சம்
மேகி ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ்-1டீஸ்பூன்
மிளகாய் தூள் -1/2டீஸ்பூன்
மல்லித்தூள்-1/2டீஸ்பூன்
கறிமசாலா தூள்-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
 
செய்முறை
பரோட்டாவை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து நறுக்கிய பரொட்டா துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து வைக்கவும்.
தக்காளி – வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பரோட்டாவை வறுத்த கடாயில் இன்னுமொரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயம், பச்சைமிளகாய் துண்டுகள் சேர்த்து ஹை ஃப்ளேமில் ஓரிரு நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கி, ம.தூள்-மி.தூள்-மல்லித்தூள்-கறி மசாலாதூள்-உப்பு சேர்த்து பச்சை வாடை போக கிளறவும்.

வறுத்து வைத்த பரோட்டா துண்டுகளைப் போட்டு கலந்துவிடவும்.

தீயைக் குறைத்து வைக்கவும்.  2 நிமிடங்கள் பரோட்டா சூடானதும் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் மேகி ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ் ஊற்றி கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஆனியன் ரைத்தாவுடன் சூடாகச் சாப்பிட சூப்பராக இருக்கும்.

Post a Comment