சிம்மிலி உருண்டை ( பாரம்பரிய உணவு )

Loading...
Description:

14192096_1082579738455748_6556401048284897675_n

இந்த உணவு நமது பாரம்பரிய உணவாகும்.
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும்.

இது மிகவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நம்மை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.

தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு 2 கப்
எள் 1 எள்
வேர்கடலை 1 கப்
ஏலக்காய் 4
துருவிய வெல்லம் 2 கப்

செய்முறை
1. கேழ்வரகு மாவை வடச்சட்டியில் 3 நிமிடங்கள் வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். தனி தனியாக ஏலக்காய், எள், வேர்கடலை வறுத்து தனி தனியாக எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.

2. கேழ்வரகு மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

3. இப்பொழுது ஒரு கீழ் பாகம் அதிகம் தட்டையான பாத்திரத்தை எடுத்து கவிழ்த்து போட்டு அதன் மேல் ஒரு ஈரமான காட்டன் துணியை எடுத்து தட்டையான பகுதியின் மேல் போட்டு கொள்ளவும். பிறகு ஒரு சிறிய அளவிலான பிசைந்து வைத்துள்ள கேழ்வரகு மாவை எடுத்து ஈரமான துணியில் மீது வைத்து தட்டையாக தட்டி வைத்து கொள்ளவும்.

4. பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தட்டையாக தட்டி வைத்துள்ள கேழ்வரகு மாவை எடுத்து சூடாக உள்ள தோசை கல்லின் மீது போடவும்.

5. தோசை கல்லில் உள்ள கேழ்வரகு ரொட்டியின் மீது வேர்க்கடலை விட்டு இருபுறமாக வேகவிட்டு எடுக்கவும்.

6. பிறகு கேழ்வரகு ரொட்டி சூடாக இருக்கும் சமயத்துல இந்த ரொட்டியை துண்டு துண்டுகளாக பிச்சுபோட்டு கொள்ளவும்.

7. இப்பொழுது வறுத்து ஆறவைத்து எடுத்து வைத்துள்ள எள்ளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு தனி தனியாக ஏலக்காய் மற்றும் வேர்கடலையை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் வைக்கவும்.

8. பிறகு துண்டு துண்டாக பிச்சுபோட்ட கேழ்வரகு ரொட்டியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

9. இப்பொழுது கேழ்வரகு ரொட்டி பொடி, வேர்க்கடலை பொடி, எள் பொடி, ஏலக்காய் தூள் மற்றும் துருவிய வெல்லம் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

10. பின்னர் அனைத்தும் ஒன்றாக கலந்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் கொட்டி கொள்ளவும், பின்பு அதை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

Post a Comment