சிக்கன் பிரியாணி

Loading...
Description:

14720360_1130085263705195_326924712519710308_n

தேவையான பொருட்கள்

சிக்கன் – 3/4 கிலோ
பாஸ்மதி அரிசி – ½ கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 8 ஸ்பூன்
புதினா & கொத்தமல்லி தழை – 1 கப்
குழம்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
பிரியாணி மசாலா – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1.முதலில் சுத்தம் செய்த கோழியில் சிறிது மிளகாய் தூள் உப்பு தயிர் 3 ஸ்பூன் சேர்த்து ஊற வைக்கவும். அடுத்து பாஸ்மதி அரிசியை ஒரு டம்ளரில் அளந்து பாத்திரத்தில் போட்டு ஊற வைத்துக்கொள்ளவும்.

2.இதற்கு பின்பு தான் பிரியாணிக்கு தேவையான காய்கறிகளை நறுக்க ஆரம்பிக்க வேண்டும்.

3.குக்கரில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் பட்டை லவங்கம் சோம்பு பிரிஞ்சி இலை போட்டு தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

4.வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கியபின் புதினா கொத்தமல்லி சேர்க்கவும்.

5.இப்போது அதில் தக்காளி போட்டு வதங்கியதும், குழம்பு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் பிரியாணி மசாலா உப்பு சேர்த்து அதில் ஊற வைத்த கோழியை போடவும். பின்பு அதில் அரை டம்ளர் நீர் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வைக்கவும்.

6.தனியாக ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அரிசிக்கு 1½ டம்ளர் என்ற கணக்கில் நீர் விட்டு அது கொதித்ததும் அதை குக்கரில் ஊற்ற வேண்டும். கோழியை வேக வைக்க ஏற்க்கனவே நீர் சேர்த்திருப்பதால் மொத்த நீரின் அளவில் அரை டம்ளர் நீரை குறைத்து விடவும் இல்லையென்றால் அரிசி குழைந்து விடும்.

7.நீரை நன்றாக வடித்து விட்டு அரிசியை குக்கரில் போட்டு ஒரு கொதி வந்ததும், உப்பு காரம் சரி பார்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி விடவும்.

8.அடுப்பை சிம்மில் வைத்து விசில் வர ஆரம்பிக்கும் போதே… அடுப்பை அணைத்து விட வேண்டும்.

9.முழுமையாக விசில் அடங்கியதும் தான் குக்கரை திறக்க வேண்டும். நெய் சேர்க்க விரும்பினால் சிறிது சேர்க்கலாம்.

குறிப்பு :

நாட்டு தக்காளி என்றால் புளிப்பாக இருக்கும் என்பதால்…எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டியது இல்லை.

Post a Comment