சிக்கன் சால்னா,tamil samayal kurippu

Loading...
Description:

11218939_1587970748143600_2975531693836886105_n

தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

வறுத்து அரைப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
பட்டை – 2 இன்ச்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 5
கிராம்பு – 5
தேங்காய் – 1 கப் (துருவியது)

செய்முறை:
*வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் அதில் வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

*பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

*அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

*பின் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, சிக்கனையும் சேர்த்து, மசாலா சிக்கனுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும்.

*அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயை குறைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, குக்கரை இறக்கி வைக்க வேண்டும்.

*பின் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கிளறி, 10-15 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் சால்னா ரெடி

Post a Comment