சாம்பார் வடை (Sambar Vadai)

Loading...
Description:

sambar vadaதேவையான பொருட்கள்:

வடை செய்ய தேவையான பொருட்கள்:

 • உளுந்து -2கப்
 • உப்பு
 • எண்ணெய்

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்: 

 • துவரம் பருப்பு-1/2கப்
 • பரங்கிக்காய்
 • தக்காளி
 • புளி கரைசல்
 • பெருங்காயம்
 • மஞ்சள்தூள்
 • கருவேப்பிலை
 • கொத்தமல்லிதழை
 • வெல்லம்

தாளிக்க :

 • கடுகு
 • உளுந்தம் பருப்பு
 • நெய்
 • எண்ணெய்

வறுத்து பொடிக்க:

 • காய்ந்தமிளகாய்-6
 • கடலைபருப்பு
 • தனியா
 • வெந்தயம்
 • சீரகம்
 • உப்பு

செய்முறை:

 1. குக்கரில் துவரம் பருப்பு,பரங்கிக்காய் ,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
 2. வெறும் கடாயில் காய்ந்தமிளகாய்,தனியா ,கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம்,வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
 3. வேக வைத்த பருப்பை மசித்து கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் , நெய் கலவையை ஊற்றி அதில் கடுகு ,உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி,உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
 4. தக்காளி நன்றாக வதக்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து அதனுடன் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும் .
 5. கொதி வந்தவுடன் பெருங்கயத்தூள் ,கொத்தமல்லிதழை சேர்த்து கொதிக்க விடவும்.
 6. அரைத்த பொடியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும் இல்லையெனில் கட்டி சேர்ந்து விடும்.
 7. அத்துடன் வேக வைத்து மசித்த பருப்பு கலவையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.அதனுடன் வெல்லம் சேர்த்து சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
 8. கருவேப்பிலை,நெய்,கொத்தமல்லிதழை தூவி இறக்கி வைக்கவும்.
 9. வடைக்கு தேவையான மாவை ஆட்டி எடுத்து வைத்துகொள்ளவும்.
 10. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு ஆனதும் வடையாக தட்டி சிறிது சிவந்து வெந்ததும் எடுத்து விடவும்.
 11. மற்றொரு பாத்திரத்தில் கொஞ்சம் சாம்பார் ஊற்றி அதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
 12. சூடான வடையை எடுத்தவுடன் கரைத்து வைத்த சாம்பாரில் போட்டு கொஞ்ச நேரம் ஊற வைக்கவும்.
 13. பரிமாறும் பொழுது ஊற வைத்த வடையின் மேல் சாம்பார் ஊற்றி கொஞ்சம் வெங்காயம், சேவு ,கொத்தமல்லிதழை தூவி பரிமாறலாம் .
 14. கடையில் கிடைக்ககூடிய சாம்பார் வடையை போலவே அருமையாக இருக்கும்.

Post a Comment