சாக்கோ நட் ஐஸ் கிரீம்Tamil Samayal,Tamil, Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

சாக்கோ நட் ஐஸ் கிரீம்

 சாக்கோ நட் ஐஸ் கிரீம் தேவையான பொருட்கள்

பால்                                         – 1 கப்
கிரீம்                                        – 3 கப்
முட்டை வெள்ளை        – 6
பாதாம் பருப்பு                    – 4
பொடித்த சர்க்கரை          – 7 டேபிள் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ்           – 2 டீஸ்பூன்
கொக்கோ பவுடர்              – 2 டேபிள் ஸ்பூன்

 சாக்கோ நட் ஐஸ் கிரீம் செய்முறை

பாதாம் பருப்புகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். 6 முட்டையின் வெள்ளையை எடுத்துக் கொண்டு நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து நுரைக்க கலக்கவும். பாலையும் கொக்கோ பவுடரையும் கலந்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை கெட்டியாக ஆகும் வரை கிளறவும். கிரீமை நன்றாகக் பீட் செய்து பால் கலவையுடன் கலக்கவும். எசன்ஸையும் கலந்து மெதுவாக கலக்கவும். அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையையும் கலக்கவும். எல்லாக் கலவையையும் ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை ஃப்ரிஸரில் வைத்து பாதி கெட்டியானதும் வெளியே எடுக்கவும். (உடைத்து வைத்துள்ள பாதாம் பருப்புகளை வெறும் வாணலியில் வறுக்கவும்). அதனுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து திரும்பவும். ஃப்ரிஸரில் வைத்து செட் செய்யவும்.

Post a Comment