சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை மாவு புட்டு

Loading...
Description:

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒரு கப்,
எலுமிச்சம் பழம் – பாதி,
பச்சை மிளகாய் – 4,
வெங்காயம் – 1,
கடுகு – தேவையான அளவு,
பெருங்காயம் – தேவையான அளவு,
கறிவேப்பிலை – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

வறுத்த மாவு ஆறியதும் அத்துடன் சிறிது உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவிடவும். மாவு நன்றாக வெந்த பின் புட்டு போல உதிர்ந்துவிடும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு தாளித்த பின்னர் ஆவியில் வெந்த கோதுமை புட்டு சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

சூப்பரான சத்தான கோதுமை புட்டு ரெடி.

Post a Comment