கோழி கால் ஃப்ரை ( Leg Piece )

Loading...
Description:

13680598_1060317857348603_4406692165955690293_n

இது காரைக்குடி கோழி கால் ஃப்ரை.

தேவையான பொருட்கள்
கோழி கால் 4
இஞ்சி-பூண்டு விழுது 3 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
வேர்கடலை எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
இலவங்கம் 4
பட்டை 1 இன்ச்
அண்ணாச்சி மொக்கு 1
வெங்காயம் 2 பெரியது ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 2 பெரியது ( பொடியாக நறுக்கியது )
கறிவேப்பில்லை 1 கைப்பிடி
பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது )
உப்புத்தூள் தேவையான அளவு

செய்முறை
1. கோழி கால்களை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும். பிறகு அதில் சில கீறல்கள் போடவும். அப்போது தான் மசாலா கலவை உள்ளேயே இறங்கும்.

2. ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள் மற்றும் உப்புத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

3. கோழி கால்களில் நன்றாக இந்த மசாலாவை நன்றாக தடவி கலந்து ஊறவைக்கவும்.

4. ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, அண்ணாச்சி மொக்கு போட்டு நன்றாக வதக்கவும்.

5. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும். அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்கு மசித்து கூழ் போல் ஆனதும் அதில் மசாலா கலவையில் ஊறவைத்துள்ள கோழி கால்களை வடசட்டியில் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

7. இப்பொழுது 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். மூடி போட்டு வேக வைக்கவும்.

8. சிறுதீயில் வேகவிடவும். கோழி கால் நன்றாக வெந்ததும் மூடியை திறந்து கிரேவி நன்றாக வற்றும் வரை கிளறவும்.

9. கிரேவி சாதத்திற்கு வேண்டுமெனில் கொஞ்சமாக கரண்டி மூலம் எடுத்து கொள்ளலாம். மீதமுள்ள கிரேவியை சிறுதீயில் சுண்ட சுருள வதக்கவும் அவ்வபோது சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஃப்ரை செய்து கொள்ளவும்.

10. கிரேவி வற்றி கோழி கால் பொன்னிறமாக மாறும். கோழி கால்களை கிளறி கொண்டே இருக்கவும். மசாலாவுடன் கோழி கால்கள் நன்றாக பிரட்டி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.

Post a Comment