கோல்டன் டிராகன் சூப்,Tamil Recipe Cooking Methods Video by Tamil Samayal

Loading...
Description:

கோல்டன் டிராகன் சூப்

 என்னென்ன தேவை? 

வேக வைத்த, தோலுரித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்,
வெண்ணெய், மைதா மாவு – தலா 2 டீஸ்பூன்,
வேகவைத்த பச்சைப் பட்டாணி – அரை கப்,
வெங்காயம் – 1 பெரியது.
பால், க்ரீம் – தலா 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப,
சோள மாவு – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?  
கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கிய வெங்காயம் கொண்டு வதக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கை பாலுடன் சேர்த்து மிக்ஸியில்  அடித்து சேர்க்கவும்
இத்துடன் மைதாவையும் கரைத்து சேர்க்கவும். அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க விடவும். இதில் உப்பு, வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்க்கவும். இது கொதித்தபின் சோளமாவை கரைத்து சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி மிளகுத்தூள் தூவி க்ரீமுடன் பரிமாறவும்.

குறிப்பு: பால், தண்ணீர் தேவைப்பட்டால் சேர்க்கவும்

Post a Comment