கோதுமை வாழைபழ தோசை

Loading...
Description:

banana-dosa-e1454310472931

தேவையான பொருள்கள்
கோதுமை மாவு -1 கப் (4 தோசைக்கு தேவையான அளவு)
பழுத்த வாழைபழம் -1
வெல்லம் -2 ஸ்பூன்
ஏலக்காய் தூ ள் -சிறிது
தேங்காய் துருவல் -2 டேபிள் ஸ்பூன்
உப்பு -சிறிது

மேலே உள்ள பொருள்கள் அனைத்தையும் இட்லி மாவு பதத்திற்கு கலந்து medium flame ல் தோசை இரு புறம் திருப்பி போட்டு சுடவும் இது evening நேரத்திற்கு ஏற்ற டிபன் ,கணவர் வீட்டில் இல்லாத நாளில் சட்டினி வைக்க மூட் இல்லாவிடில் இதை செய்யலாம் ,வாழைபழதில் இனிப்பு சுவை இருப்பதால் சிறிது இனிப்பு போதும் ,அதிக இனிப்பு சேர்த்தால் தோசை திருப்ப முடியாது ,சிறிது இனிப்பு சுவை உடைய தோசை இது .

குறிப்பு
மாவு கலந்த பின் சிறிது எடுத்து நாவில் வைத்து பார்க்கவும் இனிப்பு சுவை தெரியும் ,ஒரு தோசை சுட்ட பின் உங்களுக்கு இனிப்பு இன்னும் தேவை என்றால் சிறிது சேர்த்து கொள்ளலாம் ,அதிக இனிப்பு இருந்தால் சாப்பிடும் போது திகட்டிவிடும் என்பது என்விருப்பம்

 

இந்த மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து தளர்வாக கலந்து ,பணியாரமாக செய்யலாம் ,மாவை ஒரு 2 மணி நேரம் வைத்து செய்தால் ,சோடா உப்பு சேர்க்க தேவை இல்லை.

இல்லையென்றால் சிறிதுசோடா உப்பு சேர்க்கவேண்டும் ,மெதுவாக பணியாரம் வரும் ,பாதி எண்ணெய் பாதி நெய் சேர்த்தும் செய்யலாம் நெய் சேர்க்க விரும்பாவிடில் மாவில் சிறிது நெய் சேர்த்து விடலாம் kids விரும்பி சாப்பிடுவார்கள் ,ஸ்கூல் டிபன் பாக்ஸ் ல் வைத்து தரலாம் எனக்கு இந்த அளவு இனிப்பு போதும் ,நீங்கள் ஒரு முறை செய்து பார்த்து விட்டு இனிப்பு தேவை என்றால் சிறிது சேர்த்து கொள்ளலாம்

Post a Comment