கோக்கோ ஐஸ்கிரீம்,Tamil Recipe Cooking Methods Video by Tamil Samayal

Loading...
Description:

கோக்கோ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

  • பால் — 1 லிட்டர்
  • கோக்கோ — 4 டீஸ்பூன்
  • சாக்லேட் எசன்ஸ் — 4 துளி
  • சர்க்கரை — 1/2 கிலோ

செய்முறை

  1. பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிரவைக்கவும்.
  2. அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
  3. மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும்.
  4. 10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.
  5. பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.

Post a Comment