கொள்ளு ரசம்tamil samayal kurippu in tamil language

Loading...
Description:
  • 229381. கொள்ளு – 3 மேஜைக்கரண்டி
  • 2. தக்காளி – 1
  • 3. பூண்டு – 5 பல்
  • 4. ரசப்பொடி – 1 1/2 தேக்கரண்டி
  • 5. கொத்தமல்லி, கறிவேப்பிலை
  • 6. உப்பு, மஞ்சள் தூள்
  • தாளிக்க:
  • 7. எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
  • 8. கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு
  • 9. பெருங்காயம்
  • 10. மிளகாய் வற்றல் – 2

 

  • குக்கரில் கொள்ளுடன் 3 கப் நீர் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
  • நீரை வடித்து எடுத்து கொண்டு கொள்ளை மத்து கொண்டு மசிக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
  • இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பிரட்டவும். (லேசாக பிரட்டினால் போதும் வதக்க தேவை இல்லை.)
  • இத்துடன் மஞ்சள் தூள் மற்றும் ரசப்பொடி சேர்த்து சூடான எண்ணெயில் ஒரு முறை பிரட்டி உடனே கொள்ளு வேக வைத்த நீரை சேர்க்கவும்.
  • இத்துடன் மசித்த கொள்ளு சேர்க்கவும்.
  • தேவையான உப்பு சேர்த்து கொத்தமல்லி இலை தூவி ஒரு கொதி கொதித்ததும் எடுக்கவும்.

Note:

இது நல்ல சுவையான கொள்ளு ரசம். கொள்ளு சேர்ப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சளி கட்டுப்படும்.

Post a Comment