கொத்து முட்டை மசாலா இட்லி

Loading...
Description:

இந்த முட்டை மசாலா இட்லி நான் சுற்றுலா சென்று இருந்த போது எனது நண்பர் திரு. மாஸ்டர். பிரகாஷ் பார்க்க சென்றேன்.

அவருடைய சொந்த உணவகத்தில் எனக்கு ஸ்பெஷலாக செய்து பரிமாறப்பட்டது. திரு.பிரகாஷ் இன்று ஒரு உணவகத்தின் உரிமையாளர் என்பதில் பெருமை அடைகிறேன்.

தேவையான பொருட்கள்
இட்லி 3 ( உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும் )
முட்டை 3
வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1/2 ( பொடியாக நறுக்கியது )
கறிவேப்பில்லை ( கொஞ்சம் பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் ( கொஞ்சம் பொடியாக நறுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு
மட்டன்/ நாட்டுக்கோழி / குருமா குழம்பு – 4 குழம்பு கரண்டி
குரு மிளகு தூள் 1 தேக்கரண்டி
மரச்செக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி

செய்முறை
1. இட்லியை நன்றாக இட்லி உப்புமாக்கு உதிர்த்து கொள்வது போல் உதிர்த்து கொள்ளவும்.

2. இப்பொழுது வடைச்சட்டியில் 2 மேஜைக்கரண்டி மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் , அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

3. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.அதில் 3 கரண்டி மட்டன் / நாட்டுக்கோழி / குருமா குழம்பு ஊற்றி நன்றாக ஒரு கிளறு கிளறி சிறுதீயில் கொதிக்க வைக்கவும்.

5. அதில் வர மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறவும். அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கொத்தி கிளறவும்.

6. இப்பொழுது நன்றாக உதிர்த்த இட்லியை வடச்சட்டியில் முட்டை கலவையில் சேர்த்து கொள்ளவும். அதில் மட்டன் / நாட்டுக்கோழி/ குருமா குழம்பு 1 கரண்டி சிறிது சிறிதாக ஊற்றி , அதில் குரு மிளகு தூள் சேர்த்துகோங்க நன்றாக சுருள சுருள கிளறவும்.

7. இச்சமயத்துல பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு
1. இதற்கு நீங்கள் பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து செய்யலாம்.

Post a Comment