கொடி இடை கிடைக்கச் செய்யும் பயிற்சி

Loading...
Description:

கொடி இடை கிடைக்கச் செய்யும் பயிற்சிஇந்த பயிற்சி முக்கியமாக பெண்களுக்கு தான். தொப்பை அதிகம் உள்ளவர்கள், பிரசவம் முடிந்த பெண்கள் இந்த பயிற்சியை செய்யலாம். இந்த பயிற்சியை தினமும் 30 நிமிடம் செய்தால் போதுமானது. ஜிம்முக்கு சென்று தான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில்லை.

வீட்டில் இருந்தபடியே சில எளிய பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை ஒரு பக்கமாக நீட்டி வலது கையை முட்டி வரை மடக்கி தரையில் ஊன்றியும், இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு படம் A-யில் உள்ளபடி படுக்கவும்.

பின்னர் B-யில் உள்ளபடி இடது கையை நேராக நீட்டவும். இப்போது தலையை இடது பக்கமாக திருப்பி இடது கை உள்ளங்கையைப் பார்க்கவும். பின் இடது கையை இடுப்பின் வலது பக்கமாக கொண்டு செல்லவும். படம் C-யில் உள்ளபடி இருக்க வேண்டும்.

இது அனைத்தும் சேர்ந்தது ஒரு செட். இவ்வாறு ஒரு பக்கம் செய்த பின்னர் அடுத்த பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 15 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால் உங்கள் இடை குறைந்து கொடி இடைபோல் மாறி இருப்பதை காணலாம்.

Post a Comment