கொங்கு முட்டை சுக்கா

Loading...
Description:


இந்த முட்டை சுக்கா கொங்கு கிராமியத்து பகுதிகளில் எங்கள் அப்பத்தா வீட்டில் இந்த முட்டையை நாட்டுக்கோழி முட்டையில் செய்வார்கள்.

இந்த முட்டை சுக்காவை தண்ணீர் சாம்பார் ( வெங்காய சாம்பார் ) உடன் செய்வார்கள். நாங்கள் போட்டி போட்டு சாப்பிட்ட காலம்.

தேவையான பொருட்கள்

வேகவைத்த முட்டை 4 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
தக்காளி 1 பொடியாக நறுக்கியது
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
மரசெக்கு கடலெண்ணய் 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது)
உப்புத்தூள் தேவையான அளவு

செய்முறை
1. முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது உப்புத்தூள் மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். முட்டையை தோலுரித்து பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

2. இப்பொழுது ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல போட்டு வதக்கவும்.

3. பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.அதில் பச்சை மிளகாய் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

5. அதில் மஞ்சள் தூள் , வர மிளகாய் தூள், கரம்மசாலா தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக இந்த கலவை கூழ் போல் ஆகும் வரை வதக்கவும்.

6. இப்பொழுது நன்றாக பொடியாக நறுக்கி வைத்துள்ள வேகவைத்த முட்டையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுப்பை சிறுதீயில் வைத்து சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி நன்றாக சுருள வதக்கவும்.

7. இதை கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.

Post a Comment