கொங்கு உருளைகிழங்கு வறுவல்

Loading...
Description:

15135755_1148828748497513_2360115738758081277_n


இந்த கொங்கு உருளை வறுவல் சாம்பார் , மோர் குழம்பு போன்ற உணவு களுடன் சரியான துனை உணவாகும்.

தேவையான பொருட்கள்
உருளைகிழங்கு 4
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 /2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
எங்கள் மரசெக்கு கடலெண்ணய் 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை 1 கொத்து

மசாலா அரைக்க
உளுத்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
கடலைபருப்பு 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் 6
கொத்தமல்லி விதைகள் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
எங்கள் மரசெக்கு கடலெண்ணய் 1/2 தேக்கரண்டி

செய்முறை
1. ஒரு வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

2. பிறகு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகென்ன மிக்ஸியில் போட்டு நைசாக பொடியாக அரைத்து வைத்துகொள்ள வேண்டும்.

3. உருளைகிழங்கை வேகவைத்து , பிறகு தோலுரித்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

4. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகு அதில் சீரகம் சேர்த்து பொறியிய ஆரம்பித்ததும் அதில் கடலைபருப்பு மற்றும் உளுந்தையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.பிறகு கறிவேப்பில்லை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. அதில் வேகவைத்து நறுக்கி வைத்துள்ள உருளைகிழங்கை சேர்த்து வதக்கவும் அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் உப்புத்தூள் தேவையான அளவு சேர்த்து வதக்கவும். இதை 15 நிமிடங்கள் வரை சிறு தீயில் வதக்கவும்.

7. அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து நன்றாக வதக்கவும். கவனம் தேவை உருளை உடையாமல் பார்த்து கொள்ளவும்.

8. இப்பொழுது இடை இடையில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி குறைந்தபட்சம் 7 நிமிடங்கள் வரை வதக்கவும்.

Post a Comment