கொங்கு இறால் கறி

Loading...
Description:

இந்த இறால் கறி கொங்கு பகுதிக்கு என்ற மணத்துடன் மற்றும் சுவையுடன் இருக்கும்.

இதை சுடு சாதத்துடனோ அல்லது சப்பாத்தி, தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/5 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
கொத்தமல்லி இலைகள் கொஞ்சம்
பசு வெண்ணை 1 மேஜைக்கரண்டி

ஊறவைக்க
உரித்த இறால் 400 கிராம்
கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி
எலுமிச்சம்பழ சாறு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மஞ்சள்தூள் 2 சிட்டிகை

தாளிக்க மசாலா ஐட்டம்
சோம்பு 1/2 தேக்கரண்டி
பட்டை 2 இன்ச்
கிராம்பு 8
பிரிஞ்சி இலை 1

மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் 18
தக்காளி 2
இஞ்சி 1 இன்ச்
பூண்டு 12 பற்கள்
பச்சை மிளகாய் 6
வரமிளகாய் 1

செய்முறை
1. இறாலை நன்றாக சுத்தமாக கழுவி வைத்து கொள்ளவும்.

2. இறாலை நன்றாக ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிசிறி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

3. இப்பொழுது வடைச்சட்டியில் ஒரு இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊறவைத்தள்ள இறாலை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் இருந்து தண்ணீர் வெளியேறும் அதிலே 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

4. இறால் நன்றாக வெந்து விட்டால் சுருண்டு விடும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.

5. இப்பொழுது வடச்சட்டியில் மீதமுள்ள மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் மசாலா தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. பிறகு அதில் கறிவேப்பில்லை சேர்த்துநன்றாகவதக்கவும்.

7. இப்பொழுது மிக்ஸியில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்துகோங்க சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்றாக மையமாக விழுதாக நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

8. இப்பொழுது வடைச்சட்டியில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

9. இப்பொழுது அதில் வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம்மசாலா தூள் , மற்றும்தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து நன்றாகவதக்கவும்.

10. அதில் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

11. இப்பொழுது அதில் வேகவைத்துள்ள இறாலை வேகவைத்த தண்ணீரோடு சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

12. அடுப்பை சிறுதீயில் வைத்து நன்றாக சுண்ட வைக்க வேண்டும் மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

13. இப்பொழுது அதனுடன் பசு வெண்ணை சேர்த்துகோங்க நன்றாக சுருள சுருள கிளறவும்.

14. இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவவும்.

Post a Comment