கோதுமை மாவு முறுக்கு எளிதாக செய்யும் செய்முறை | தீபாவளி சிற்றுண்டி சமையல்

Loading...
Description:

10551045696_eba4239a93_z

கோதுமை மாவு முறுக்கு செய்முறை:
சமையல் முறை: இந்திய முறை | ரெசிபி வகை: ஸ்நாக்ஸ் / சிற்றுண்டி
தயாரிக்கும் நேரம்: 10 நிமிடங்கள் | சமையல் நேரம்: 20 நிமிடங்கள் | 14 முறுக்குகள் செய்யலாம்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 1 கப்
சிவப்பு மிளகாய்த்தூள் 3/4 தேக்கரண்டி
சீரகம் / ஓமம் 1 & 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு சுத்தமான வெள்ளை துணியில் கோதுமை மாவை நன்கு கட்டிக் கொண்டு ஆவியில் வேக வைக்கவும். நீங்கள் உங்கள் இட்லி பாத்திர தட்டில் இந்த துணியை வைத்தும் வேக வைக்கலாம். நான் மூங்கிலை பயன்படுத்தி வேக வைத்தேன். நீங்கள் பிரஷர் குக்கர் ஆவியில் கூட வேக வைக்கலாம். ஒரு குக்கர் பாத்திரத்தில் இந்த பையை வைத்து மூடி போட்டும் (விசில் இல்லாமல்) ஆவியில் வேக வைக்கலாம். இதை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்க வேண்டும்.
2. கை பொறுக்கும் அளவிற்கு சூடாக இருக்கும் போது கட்டிய துணியை அவிழ்த்து மாவை உடைத்து விடவும்.
3. சிறு கட்டிகள் கூட இல்லாமல் உங்கள் கையையோ அல்லது சல்லடையையோ உபயோகித்து உடைத்து விடவும். நான் இந்த முறுக்கை செய்ய பூ வடிவத்தில் உள்ள தட்டையை பயன்படுத்தினேன், நீங்கள் உங்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம்.
4. மாவை தயார் செய்யும் நேரத்தில் நீங்கள் கடாயில் எண்ணெயை சூடுபடுத்தவும். மாவுடன், சிவப்பு மிளகாய் தூள், பெருங்காயம், உப்பு மற்றும் சீரகம் சேர்க்கவும். எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்(சூடான எண்ணெய் என்றால் நல்லது). இதனுடன் தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். மாவானது இளக்கமாகவும், மென்மையாகவும், கையில் ஒட்டாத அளவிற்கும் இருக்குமாறு பிசையவும், ஆக மொத்தத்தில் மாவானது நன்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
5. சுருள் வடிவில் அல்லது உங்களுக்கு என்ன வசதியோ அந்த வடிவத்தில் உள்ள அச்சை எடுத்துக் கொள்ளுங்கள். நான் சுருள் வடிவில் உள்ள அச்சை முறுக்கு செய்ய பயன்படுத்தினேன். கீழே உள்ள காணொளியில் உங்களுக்கான வழிகாட்டலை பார்க்கவும். நான் ஒரு பிளாஸ்டிக் தட்டில் முறுக்கை பிழிந்து கொண்டு, அதை தோசை திருப்பியை பயன்படுத்தி எண்ணெயில் எடுத்து போட்டேன்.
6. இதை நன்கு எண்ணெயில் பொரிக்கவும். எண்ணெய் சத்தம் அடங்கும் வரையும், எண்ணெய் குமிழிகள் அடங்கும் வரையும் பொரிக்கவும். மேலும் முறுகலாகவும், பொன்னிறமாகும் வரையும் பொரிக்கவும். முறுக்கை பொரிக்கும் போது எண்ணெய் சூடானது ஒரே மாதிரி இருக்க வேண்டும், இல்லையெனில் முறுக்கு சரியாக வேகாமல் போய்விடும். இப்பொழுது அடுத்த பகுதிக்கான முறுக்கை பிழிந்து வைத்துக் கொள்ளவும், ஏற்கனவே வெந்த முறுக்குகளை எடுத்து ஒரு எண்ணெய் வடிக்கும் காகிதத்தில் போடவும்.
குறிப்புகள்
* ஆவியில் சரியாக வேக வைக்கவும், எக்காரணம் கொண்டும் கட்டிய துணிக்குள் நீரானது உள்ளே புகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஆவியில் வேக வைத்த பிறகு மாவானது ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். பிசைந்த மாவானது கையில் ஒட்டாதவாறும், எலாஸ்டிக் போல இல்லாமலும் இருக்க வேண்டும்.
* நீங்கள் சிவப்பு மிளகாய் தூளுக்கு பதிலாக கருப்பு மிளகு தூளை உபயோகிக்கலாம்.
* எண்ணெய் போதுமான அளவிற்கு சூடாகும் முன்பே முறுக்கை போட வேண்டாம், அப்படி போட்டால் அது அதிகமாக எண்ணெய் குடிக்கும், மேலும் சரியான சூட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

Post a Comment