கேரளா பயறு கறி – Kerala Payaru kari tamil

Loading...
Description:

20140203_081157

கேரளா பயறு கறி
Whole moong dal
இது இங்குள்ள எல்லா சின்ன சின்ன  டீக்கடை பேச்சுலர்கள் சாப்பிடும் ரெஸ்டாரண்டுகளில் கண்டிப்பாக இந்த கறி வகை  கிடைக்கும்  இதை புட்டு  (அ) ஆப்பம்க்கு தருவார்கள் , இடியாப்பத்துடனும் சாப்பிடலாம், நல்ல இருக்கும்.

 

தேவையான பொருட்கள்
குக்கரில் வேகவைக்க
சிறு பயறு – (முழு பாசிபருப்பு) ஹோல் மூம் தால் – 150 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்ச மிளகாய் நீளவாக்கில் கீறியது – 3
இஞ்சி துருவியது – ஒரு தேக்க்ரண்டி
மஞ்சள் தூள்  – சிறிது
தேங்காய் பவுடர் – 1 மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க
எண்ணை – 3 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – 8 இதழ்
காஞ்ச மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 2
செய்முறை
பாசிபயிறை இரவே ஊறவைத்து காலையில் நன்கு களைந்து காலையில் அதன் தண்ணீரை வடித்து குக்கரில் போட்டு 350 மில்லி தண்ணீர்சேர்த்து வெங்காயம் தக்காளியை அரிந்து சேர்க்கவும், தேங்காய் பவுடரை சிறிது வென்ணீரில் கரைத்து அதையும் ஊற்றி இஞ்சி ,பச்சமிளகாய்,உப்பு , மஞ்சள் பொடி சேர்த்து குக்க்ரை மூடி 3, 4 விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியது குக்கரின் மூடியை திறந்து லேசாக மசித்து விட்டு ரொம்ப கட்டியாக இருந்தால் சிறிது வெண்ணீர் ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.
பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
சுவையான கேரளாஸ்பெஷல் பயறு கறி ரெடி.
இதில் பெரும்பாலும் அவர்கள் தேங்காய் எண்ணையில் செய்வார்கள், ஆனால் இங்குள்ள ஷாப்களில் சன்ப்ளவர் ஆயிலில் தான் செய்கிறார்கள்.தேங்காய் பவுடருக்கு பதில் பிரஷ் தேங்காயில் பால் எடுத்தும் ஊற்றலாம்.
ஆபிஸ்க்கு காலை டிபன் கொண்டு செல்லவில்லை என்றால் ஆபிஸ் பக்கத்தில் உள்ள கடைகளில்தான் புட்டு பயறு கறி , அல்லது ஆப்பம்பயறு கறி வாங்கி சாப்பிடுவது. அப்படி சுவைத்ததில் செய்தது தான் இந்த கறி.

Post a Comment