கேரளா நாட்டுக்கோழி குழம்பு( நாடன் கோழி)

Loading...
Description:

14238144_1084689184911470_6970193575588607218_n

நான் சென்ற வருடம் திருச்சூரில் உள்ள எனது கல்லூரி நண்பர் வீட்டில் நடந்த விசேஷதிற்கு சென்று இருந்தேன். அங்கு அவர்கள் வீட்டில் எனக்கு விருந்து அளிக்கப்பட்டது.

எனது நண்பனின் தாயார் இடம் நான் அவர்களிடம் பேசிய படி, நான் இந்த செய்முறையை கேட்டு பெற்றேன்.

இந்த குழம்பு ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா, பூரி, பிரியாணி, புவாவ், சுடு சாதம் போன்ற உணவு வகைகளுக்கு சரியான பக்க உணவாகும்.

தேவையான பொருட்கள்
நாட்டுகோழி 500 கிராம்
தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
பட்டை 2
பிரியாணி இலை 1
வெங்காயம் 2 ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 3 ( பொடியாக நறுக்கியது )
கொத்தமல்லி இலைகள் 6 கொத்து
உப்புத்தூள் தேவையான அளவு

குழம்பு மசாலா

தேங்காய் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
தேங்காய் பால் 2 கப்
சோம்பு 2 தேக்கரண்டி
கசகசா 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 18 ( பொடியாக நறுக்கியது )
முந்திரி பருப்பு 8
இஞ்சி 1 இன்ச்
பூண்டு 12 பற்கள்

செய்முறை

1. நாட்டுகோழியை நன்றாக சுத்தமாக கழுவி பிரஷர் குக்கரில் சேர்த்து சிறிதளவு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்புத்தூளையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரூம் சேர்த்து குக்கரின் மூடியை மூடி 4 விசில் விட்டு இறக்கி கொள்ளவும்.

2. ஒரு வடசட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் பாலை தவிர மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு தனியாக எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தேங்காய் பால் சேர்த்துநன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

4. ஒரு வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

5. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

6. பிறகு அதில் பிரஷர் குக்கரில் வேக வைத்துள்ள நாட்டுக்கோழி மற்றும் அதன் வடிச்சாறை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வைக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து , தேவையான அளவு உப்புத்தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். தேங்காய் பால் மீதமிருந்தால் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

7. இப்பொழுது வடைச்சட்டியின் தட்டு கொண்டு மூடி அடுப்பை சிறுதீயில் வைத்து குறைத்தது 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். குழம்பு கெட்டி தன்மையை அவர் அவர்களுக்கு ஏற்றவாறு பார்த்து கொள்ளவும். கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும் .

Post a Comment