கேரளா தேங்காய் சட்னி,tamil samayal kerala

Loading...
Description:

Kerala-Coconut-Chutney (1)

தேங்காய் கேரள சமையலில் அதிகமாக‌ ஒருங்கிணைந்த பகுதி ஆகும். ரொட்டி மற்றும் சாத வகைகள் அனைத்திலும் கேரள மக்கள் அதிகமாக தேங்காயை பயன்படுத்துவார்கள். இந்த சட்னி காலை உணவான இட்லி மற்றும் தோசைக்கு அருமையான சைட் டிஷ் ஆகும்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
வெங்காயம்
முழு சிவப்பு மிளகாய்
கடுகு
உப்பு
நீர் மற்றும் எண்ணெய்
எப்படி செய்வது:
1. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் இவற்றை எல்லாம் சேர்த்து மற்றும் உப்பு, நீர் கொண்டு நன்கு அரைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம், முழு சிவப்பு மிளகாய் மற்றும் கடுகை தாளித்துக் கொள்ளவும்.
3. இதை அடுப்பில் இருந்து எடுத்து, அரைத்த விழுதுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். உங்கள் சட்னி தயாராக உள்ளது.

Post a Comment