கேப்பை இடியாப்பம் ( தாளிச்சது )

Loading...
Description:

str

தேவையானவை :-

கேப்பைமாவு – கால் கிலோ
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்.
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
வரமிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு
பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்.
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்.
எண்ணெய் – 2 டீஸ்பூன் தாளிக்க.

 

செய்முறை:-

கேப்பை மாவை சலித்து உப்பு சேர்த்து அதன் மேல் எண்ணெய் ஊற்றவும். இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி நன்கு பிசையவும். உருண்டைகளாக உருட்டி இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் துணி போட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

ஆறியதும் உதிர்த்து தயிரைக் கடைந்து அதில் போட்டு பிசறி வைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்துக் கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பச்சை மிளகாய் வரமிளகாய் கிள்ளிப் போடவும். கருவேப்பிலை பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி இடியாப்பத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Post a Comment