குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு மசாலா பூரி

Loading...
Description:

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்,
ரவை – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
உருளைக்கிழங்கு – 2,
சீரகம் – 1 டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது,
சாட் மசாலா – சிறிதளவு,
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்,
ஓமம் – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, ரவை, உப்பு, சாட் மசாலா, சீரகம், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், கொத்தமல்லி, பேக்கிங் பவுடர், ஓமம் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை பூரிகளாக உருட்டிவைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருட்டி வைத்துள்ள பூரியை ஒவ்வொன்றாக போட்டு சுட்டு எடுக்கவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா பூரி ரெடி.

Post a Comment