குழந்தைகளுக்கு விருப்பமான டீப் ஃபிரை எக்

Loading...
Description:

201608121414590198_how-to-make-Deep-Fried-Eggs_SECVPF.gif

தேவையான பொருட்கள் :

முட்டை – 5
சோள மாவு – 2 ஸ்பூன்
பிரட் தூள் (Panko Breadcrumbs) – அரை கப்
துருவிய சீஸ் – அரை கப்
எண்ணெய் – பொரிக்க
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு

செய்முறை :

* 1 முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்.

* இன்னொரு கிண்ணத்தில் சோள மாவு, சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து வைக்கவும்.

* மற்றொரு கிண்ணத்தில் துருவிய சீஸ், பிரட் தூள், கலந்து வைக்கவும்.

* 4 முட்டையை வேகவைத்து ஓட்டை உடைத்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

* முட்டையை ஒவ்வொன்றாக எடுத்து அதை சோள மாவில் பிரட்டி, முட்டை கலவையில் முக்கி, சீஸ் கலவையில் பிரட்டி எண்ணெய் போட்டு பொரிக்கவும்.

* சுவையான டீப் ஃபிரை எக் ரெடி.

Post a Comment