குருமாTamil Recipe Cooking Methods Video by Tamil Samayal

Loading...
Description:

குருமா

By , August 26, 2009, In Uncategorized

Home » Uncategorized » குருமா

குருமா

குருமா தேவையான பொருட்கள்

காரட்                                              – 1
உருளைக்கிழங்கு                    – 2
பீன்ஸ்                                           – 4
வெங்காயம்                                – 1
ப.மிளகாய்                                  – 4
இஞ்சி                                            – 1 துண்டு
பச்சை கொத்தமல்லி             – சிறிதளவு
பூண்டு                                           – 2 பல்
தனியா                                         – 1/4 ஸ்பூன்
தேங்காய்துருவல்                   – 3 ஸ்பூன்
பட்டை                                          – 2 பெரிய துண்டு
சோம்பு                                          – 1/4 ஸ்பூன்
கசகசா                                           – 1/2 ஸ்பூன்
முந்திரி                                         – 5
லவங்கம்                                     – 2
ஏலக்காய்                                    – 2
உப்பு                                               – 2 ஸ்பூன்
பீட்ரூட் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

குருமா செய்முறை

காய்கறிகளை பொடியாக நறுக்கி 11/2 டம்ளர் தண்ணீரில் சிறிது மஞ்சள் பொடி 1 ஸ்பூன் உப்பு போட்டு வேக விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும். ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, தனியா, சோம்பு, லவங்கம், பட்டை 1 துண்டு, தேங்காய் துருவல் இவைகளை நைசாக அரைத்துக் கொண்டு முந்திரி, கசகசா இவற்றை தனியாக அரைத்துக் கொண்டு, வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு லவங்கப்பட்டை பொடித்து ஏலக்காய் போட்டு வறுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி, தக்காளிப்பழம் 1 பொடியாக நறுக்கி வதக்கி, அரைத்த விழுதைப் போட்டு வதக்கி பின் கசகசா முந்திரி விழுதையும் சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வெந்த காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விடவும். ஆறியவுடன் தயிர் சேர்க்கலாம். அல்லது எலுமிச்சம்பழம் பிழியலாம். இதே போல் காலிபிளவர் மட்டும் போட்டு குருமா செய்யலாம்.

Post a Comment