குதிரைவாலி தயிர் சாதம்

Loading...
Description:

என்னென்ன தேவை?

குதிரைவாலி – 1 கப்
நீர் – 3 கப்
தயிர் – 1/2 கப்
பால் – 2 கப்
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது

எப்படிச் செய்வது?

ஒரு குக்கரில் குதிரைவாலி எடுத்து அதை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக விடவும். பின் அவற்றை நன்றாக கலந்து ஆறிய பின் சிறிதளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர், பால் ஊற்றி கலந்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பின் பெருங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து, கிளறி வைத்த சதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

Post a Comment