குடும்பத்தினரோடு ருசிக்கலாம் சிக்கன் பெப்பர் ப்ரை

Loading...
Description:

தேவையானவை

சிக்கன் துண்டுகள் – 1/2 கிலோ

வெங்காயம் – 150 கிராம்

கறிவேப்பிலை , மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

மிளகு – 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது – 25 கிராம்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு
செய்முறை

சிக்கனை நன்கு கழுவி சுத்தம்செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் சிக்கனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி மற்றும் பூண்டு விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்க வேண்டும்.

மீண்டும் மற்றொரு வாணலியில் தேங்காய் எண்ணெய் யை ஊற்றி அது சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை யை சேர்த்து பொன்நிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் முதலில் தயார் செய்து வைத்திருக்கும் சிக்கன் கலவை, சேர்த்து கொத்தமல்லித்தழையை தூவ வேண்டும்.

பின் இந்த சிக்கன் பெப்பர் ப்ரையை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Post a Comment