குங்குமப்பூ பேடா / கேசர் பேடா ரெசிபி

Loading...
Description:

குங்குமப்பூ-பேடா-300x248

தேவையான பொருட்கள்:
1 கப் தூளாக்கிய, இனிப்பில்லாத‌ கோவா / மாவா,
1/4 கப் சர்க்கரை
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
1 – 2 டீஸ்பூன் பால்
1/8 தேக்கரண்டி ஏலக்காய்
செய்முறை:

 

ஒரு கப் சூடான பாலில் குங்குமப்பூவை 5 நிமிடங்கள் ஊற வைத்து ந‌ன்கு நசுக்கிக் கொண்டு தனியே வைத்துக் கொள்ளவும்.
ஒரு நிமிடம் கடாயில் தூளாக்கிய‌ கோவாவை வறுத்துக் கொள்ளவும்.
இதனுடன் குங்குமப்பூ பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
சர்க்கரை கரையும் வரை காத்திருக்கவும்.
நடுத்தர தீயில் கலவை நன்கு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
கை பொறுக்கும் அளவு சூடு ஆறிய பின் இதை மென்மையான பிசையவும், தேவைப்பட்டால் சிறிது நெய்யை உங்கள் கைகளில் தடவிக் கொள்ளவும்.
இதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு தட்டையாக பேடா வடிவத்திற்கு செய்து கொள்ளவும்.
இதை எல்லாம் செய்து முடித்த பின் ஆற விடவும்.
இதை 2 நாட்களுக்குள் சாப்பிடவும்

Post a Comment