கிரீன் ஜூஸ்,Tamil Recipe Cooking Methods Video by Tamil Samayal

Loading...
Description:
26 days, 14 hours, 52 minutes ago

 என்னென்ன தேவை?

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – தலா 1 கைப்பிடி,
வெள்ளரித் துருவல் – 1 கப்,
தோல் நீக்கிய இஞ்சி – 1 துண்டு,
எலுமிச்சை ஜூஸ் -அரை டீஸ்பூன், உப்பு – சிறிது.
எப்படிச் செய்வது?
கறிவேப்பிலை முதல் இஞ்சி வரையிலான எல்லாவற்றையும் மிக்சியில் ஒன்றாகச் சேர்த்து அடித்து, வடிகட்டவும். அத்துடன் உப்பும், எலுமிச்சைச்  சாறும் கலந்து அப்படியே குடிக்கவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் குடிக்கலாம். ரத்தசோகைக்கு அருமையான மருந்து இது. குடித்தவுடன் புத்துணர்வாக உணர்வார்கள். தாகத்துக்கும் சிறந்தது!

Post a Comment