கிராமியத்து நாட்டுக்கோழி தேங்காய் பால் குழம்பு

Loading...
Description:


இந்த குழம்பு பெரும்பாலும் கொங்கு கிராமியத்து முதலியார் சமுகத்து மக்கள் வீட்டில் குறிப்பாக தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, வடவள்ளி, ஆனைகட்டி, சோலையூர், மன்னார்காடு, அட்டப்பாடி போன்ற பகுதிகளில் இந்த குழம்பு பிரசித்தமானது.

இதை அந்த பகுதிகளில் உண்டுள்ளேன். இதன் ருசியை எமது நாவினால் கூற இயலவில்லை ஏனெனில் எனது நாவல்லவா நாட்டுக்கோழி குழம்பு சுவையில் சிறைப்பட்டு கிடந்தது. நீங்களும் செய்து ருசித்து , இந்த சுவையின் ஆதிக்கத்தில் திளைக்க வேண்டுகிறேன்.

தேவையான பொருட்கள்
சிக்கன் 500 கிராம்
சின்ன வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பில்ல 1 கைப்பிடி
சோம்பு 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
கொத்தமல்லி தூள் 1 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 3 தேக்கரண்டி
தக்காளி விழுது 3/4 கப்
தேங்காய் பால் 2 கப்
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
மரச்செக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் 1/2 கப் ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 8
தேங்காய் பால் 2 மேஜைக்கரண்டி
குரு மிளகு 2 தேக்கரண்டி
பட்டை 2 இன்ச்
கிராம்பு 4
அண்ணாச்சி மொக்கு 2

செய்முறை
1 viagra se procurer. நாட்டுக்கோழியை நன்றாக சுத்தமாக கழுவி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

2. தேங்காய் துருவலை வைத்து தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது மிக்ஸியில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிறிதும் தண்ணீர் சேர்க்க கூடாது.

4. பிரஷர் குக்கரில் கழுவிய நாட்டுக்கோழியை சேர்த்து அதனுள் தேங்காய் பாலை சேர்த்து அதனுள் வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள், புதினா இலைகள் 1 கொத்து, பச்சை மிளகாய் 1 , தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க. சிறிதளவும் தண்ணீர் சேர்க்க கூடாது. தேவைக்கேற்ப தேங்காய் பாலை அதிகபடுத்தி கொள்ளவும்.

5. பிறகு பிரஷர் குக்கரின் மூடியை மூடி நன்றாக 4-5 விசில் விட்டுகோங்க.

6. இப்பொழுது வடச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல சேர்த்து நன்றாக வதக்கவும்.

7. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். அதில் சோம்பை போட்டு நன்றாக வதக்கவும்.

8.அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

9. அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பிரஷர் குக்கரில் வேகவைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

10. அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் பிரஷர் குக்கரில் உள்ள தேங்காய் பால் சாறை ஊற்றவும்.

11. அதில் வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள், தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்து நன்றாக சிறுதீயில் கொதிக்க வைக்கவும். தேவையெனில் இரண்டாவது தேங்காய் பால் கொஞ்சம் சேர்த்து கோங்க. சிறிதளவும் தண்ணீர் சேர்க்க கூடாது.

12. உங்களுக்கு ஏற்றவாறு குழம்பு கெட்டி தன்மையை கவனித்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்

Post a Comment