கிரான்பெரி ஜாம் ,todays Tamil Recipes,samayal Video

Loading...
Description:

கிரான்பெரி ஜாம் Homemade Cranberry Jam

இதுவரை ஜாம் எதுவும் வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்ததில்லை. இதுதான் முதல் முறை. முதல் முறையாக இருந்தாலும் ஜாம் மிகவும் சுவையாகவும், நன்றாகவும் வந்திருந்தது. கிரான்பெரியுடன் ஆரஞ்சு ஜெஸ்ட்(orange zest),இஞ்சி,ஆப்பிள் என இந்த காம்பினேஷன் ரொம்ப சூப்பரா இருந்தது.

டார்கெட் கடையிலிருந்து வாங்கிய உலர்ந்த கிரான்பெரி பழங்களை வைத்துதான் இந்த ஜாம் செய்தேன்.ஜாமின் சுவை எனக்கு மிகவும் பிடித்துப் போகவே, இரண்டு மூன்று நாட்களுக்கு பிரேக்பாஸ்டுக்கு டோஸ்ட் செய்த பிரட்டும், இந்த கிரான்பெரி ஜாமும் தான். ஜாமில் பிரிசர்வேட்டிவ் (Preservative) என்று நான் ஏதும் சேர்க்கவில்லை. ஆனாலுமே பிரிஜ்ஜில் வைத்துப் பயன்படுத்த ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். ஜாம் செய்ய…

தேவையான பொருட்கள்:

 • உலர்ந்த கிரான்பெரி பழங்கள் – 1/2 கப்
 • ஆப்பிள் – 1/2 பழம்
 • ஆரஞ்சு பழத்தின் மேல் தோல் (orange zest)- 1/2 டீ ஸ்பூன்
 • ஆரஞ்சு பழத்தின் சாறு – 1/2 பழம் பிழிந்த சாறு
 • நட்மெக் பவுடர் – 3 சிட்டிகை
 • இஞ்சி விழுது – 1/2 டீ ஸ்பூன்
 • சர்க்கரை – 3/4 கப்

செய்முறை:

 • கிரான்பெரி பழத்தை வெந்நீரில் 5 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
 • தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்துவிட்டு மிக்ஸியில் அரைக்கவும். பழத்தை ஒன்றிரண்டாக அரைத்துச் சேர்பதே எனக்குப் பிடித்திருந்தது.எனவே நான் விழுது போல் அரைக்காமல் ஓரளவு மட்டுமே அரைத்தேன். பிரெட்டுடன் ஜாமை தடவி சாப்பிடும் போது ஆங்காங்கே பழத்தின் சிறுசிறு துண்டுகள் வரும்போது சுவையாக இருந்தது. எனவே பழத்தை விழுதுபோல் அல்லது ஒன்றிரண்டாக உங்கள் விருப்பம் போல் முதலில் அரைத்துக் கொள்ளவும்.
 • ஆப்பிள் பழத்தை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.(கேரட் துருவியைப் பயன்படுத்தலாம்.)
 • ஆரஞ்சு பழத்தைக் கழுவி கேரட் துருவி கொண்டே அதன் மேல்புறத் தோலைத் துருவவும்.1/2 டீ ஸ்பூன் அளவுக்கு இந்த துருவலை எடுத்துக் கொள்ளவும்.
 • ஆரஞ்சுப் பழத்தை  இரண்டாக நறுக்கி 1/2 பழத்தை மட்டும் பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • இஞ்சியை தோல் சீவி விழுதாக்கவும். 1/2 டீ ஸ்பூன் இஞ்சி விழுது எடுத்துக் கொள்ளவும். நார் இல்லாத பிரெஷ் இஞ்சி பயன்படுத்தவும்.
 • அடிகனமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதில் அரைத்த கிரான்பெரி விழுது,சர்க்கரை,இஞ்சி,நட்மெக் பவுடர்,ஆரஞ்சு பழத்தின் தோல் (orange zest),ஆரஞ்சு பழத்தின் சாறு, கடைசியாக ஆப்பிள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
 • சிறிது நேரத்திற்கு ஒருமுறை கிளறிவிடவும்.
 • பழத்தில் இருந்த தண்ணீர்ப் பதம் வற்றி ‘ஜாம் பதத்திற்கு’ கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
 • ஆறியபின் சூடாக டோஸ்ட் செய்த பிரட்டின் மீது தடவி பரிமாறவும்.
 • ஜாமை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு, பிரிஜ்ஜில் வைத்திருந்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்

Post a Comment