காளிப்ளவர் பொரியல்Tamil Recipe

Loading...
Description:

காளிப்ளவர் பொரியல்

» காளிப்ளவர் பொரியல்

காளிப்ளவர் பொரியல்

காளிப்ளவர் பொரியல் தேவையான பொருட்கள்

காளிப்ளவர்                                       – 1
பெரிய வெங்காயம்                       – 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய்                              – 1 (நீளவாக்கில் நறுக்கவும்)
கறிவேப்பிலை                                – சிறிது
எண்ணெய்                                        – 2 டீஸ்பூன்
கடுகு                                                   – சிறிது
உளுந்தம் பருப்பு                            – சிறிது
மஞ்சள் பொடி                                 – சிறிது
உப்பு                                                    – தேவையான அளவு
தேங்காய்ப் பூ                                   – சிறிது
மிளகுத்தூள்                                     – 1/4 டீஸ்பூன்

காளிப்ளவர் பொரியல் செய்முறை

காளிப்ளவரை சிறிய சிறிய பூக்களாக நறுக்கி உப்பு சேர்த்த வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுக்கவும். பின் மஞ்சள் பொடி, உப்பு போட்டு வேக வைக்கவும். ஒரு சட்டியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி பின் வேக வைத்த காளிப்ளவர் போட்டு வதக்கி, மிளகுத் தூளையும் தூவி தேங்காய்ப் பூ போட்டு இறக்க வேண்டும்

Post a Comment