காளான் வறுவல்

Loading...
Description:

13615218_1043518359028553_6447408674677831397_n

நமது முகநூலீல் சில நண்பர்கள் காளான் வறுவல் வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஆதலால் நான் இன்று காளான் வறுவலை வழங்கியுள்ளேன்.

இந்த உணவு சாதம், சப்பாத்தி, பரோட்டா, பூரி, நெய் சாதம் ( கீ ரைஸ் ) போன்ற உறவுகளுக்கு ஏற்ற பக்க உணவாக ( சைட்டிஷ் ) உண்ணலாம்.

நான் மொட்டு காளான் ( பட்டன் மஷ்ரூம் ) பயன்படுத்தி செய்து உள்ளேன். இதை காட்டிலும் இலை காளான், இதற்கு சிப்பி காளான் (ஆய்ஸ்டர் மஷ்ரூம் ) என்ற பெயரும் உண்டு. இதை பயன்படுத்தி ஒரு முறை சமைத்து உண்டு விட்டால் உங்கள் நாவும் மனமும் இதையை தான் தேடும்.

இந்த காளான் சென்னையில் நட்ஸ் அன்ட் ஸ்பைசஸ் கடைகளில் கிடைக்கும். கோவையில் கோவை பழமுதிர்சோலையில் தினமும் கிடைக்கும், குறிப்பாக ஆர்.எஸ். புரம் கிளையில் கண்டிப்பாக கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க
வரமிளகாய் 3
கொத்தமல்லி விதை 3 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சோம்பு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை 1 தேக்கரண்டி
கசகசா 1 தேக்கரண்டி
இலவங்கம் 3
அண்ணாச்சி மொக்கு 1
ஜாதி பூ 1
பட்டை 1 இன்ச்
கொப்பரை தேங்காய் துருவல் 3 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் 15
இஞ்சி 2 இஞ்ச்
பூண்டு 5 பற்கள்
கறிவேப்பிலை 1 கொத்து
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

மொட்டு காளான் 1 பாக்கேட் ( 200 கிராம் )
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது )
பிரியாணி இலை 1
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லி இலைகள் 1/4 கப்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் 1 கப்
எண்ணெய் 4 மேஜைக்கரண்டி

செய்முறை

1. மொட்டு காளானை தண்ணீரில் அலசி, துணியில் துடைத்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

2. இப்பொழுது வடச்சட்டியை அடுப்புல வைத்து காய்ந்ததும் வரமிளகாய், கொத்தமல்லி விதை, சீரகம், மிளகு, சீரகம், சோம்பு, கிராம்பு, கசகசா, பொட்டுக்கடலை, அண்ணாச்சி மொக்கு இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

3. வறுத்து வைத்துள்ள பொருட்களோடு கொப்பரை தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.

4. இப்பொழுது இந்த பொடியில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.

5. பிறகு வடச்சட்டியை அடுப்புல வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக பிரியாணி இலை, பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் இந்த கலவை கூழ் போல் ஆகும் வரை வதக்கவும். தேவையான உப்புத்தூளை சேர்த்து கொள்ளவும்.

7. இந்த கலவையில் நறுக்கி வைத்துள்ள மொட்டு காளானை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் சிறிது தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஏனெனில் காளான் கொதிக்கும் சமயத்தில் தண்ணீர் விடும்.

8. இச்சமயத்துல காளான் நன்றாக வெந்து மசாலா கலவையோடு ஒன்றாக கலந்து கலவை கெட்டியாக ஆகும் வரை பெருந்தீயில் கொதிக்க விடவும்.

9. கலவை கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் வேலையில்( சிறு தீயில் ) காளான் கலவையை சுண்டி கிளறவும். இறக்கும் சமயத்துல நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.

Post a Comment